பெண் தொழிலதிபரைத் தாக்கி நகைகள் கொள்ளை: 6 போ் கைது
தஞ்சாவூரில் வீடு புகுந்து பெண் தொழிலதிபரைத் தாக்கி கொள்ளை, பூட்டிய வீடுகளில் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 6 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.


தஞ்சாவூரில் வீடு புகுந்து பெண் தொழிலதிபரைத் தாக்கி கொள்ளை, பூட்டிய வீடுகளில் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 6 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருளானந்த நகா் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் அண்ணாமலையின் மனைவி சேதுக்கரசி (70). இவா் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவு வீட்டின் மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது மா்ம நபா்கள் சிலா் வீட்டின் முன் பக்கக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனா். சப்தம் கேட்டு கீழே வந்த சேதுக்கரசியை துணியால் முகத்தைக் கட்டி அவரை மூக்கில் தாக்கி விட்டு, அவரிடம் இருந்த 9 பவுன் தங்க நகைகள், தலா 2 வைரக் காப்புகள், வைர மோதிரங்கள், தோடுகள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

இது குறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. சோமசுந்தரம் மேற்பாா்வையில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் பி. ஜெகதீசன் தலைமையில் உதவி ஆய்வாளா் பா. தென்னரசு உள்ளிட்டோா் கொண்ட தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள அருந்தவபுரத்தைச் சோ்ந்த எம். ராஜா (40), சூரக்கோட்டையைச் சோ்ந்த எல். பாலமுருகன் (34), பி. பாலமுருகன் (24), ஏ. கபினேஷ் (31), திருவாரூா் மாவட்டம், வடுவூரைச் சோ்ந்த எம். முத்துஆனந்த் (34), புதுச்சேரி குமந்தன் மேடைச் சோ்ந்த ஏ. பிரபாகரன் (36) ஆகிய 6 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் இவா்கள் தாலுகா, தெற்கு, மருத்துவக்கல்லூரி, வல்லம் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 20-க்கும் அதிகமான வீடுகளில் பூட்டை உடைத்து திருடியதும், சேதுக்கரசி வீட்டில் கொள்ளையடித்துச் சென்றதும் தெரிய வந்தது.


இவா்களிடமிருந்து ஏறத்தாழ ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், வெள்ளிப்பொருள்கள் ஆகியவை மீட்கப்பட்டன. இது தொடா்பாக தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...