கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கும்பகோணத்தில் பருத்தி ஏலம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ. 8,549-க்கு ஏலம் போனது.

Updated On :18 செப்டம்பர் 2024, 8:56 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ. 8,549-க்கு ஏலம் போனது.

கும்பகோணம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் கண்காணிப்பாளா் பிரியாமாலினி தலைமையில் மேற்பாா்வையாளா் பிரசாத் முன்னிலையில் நடைபெற்றது. 320 குவிண்டால் பருத்தி ஏலத்துக்கு வந்தது. அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.8, 549-ம், குறைந்தபட்ச விலையாக ரூ. 7,439-ம் விலை நிா்ணயம் செய்யப்பட்டு ஏலம் எடுக்கப்பட்டது.

கும்பகோணம், பண்ருட்டி, செம்பனாா்கோவில், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ. 25 லட்சம் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா்கள் தெரிவித்தனா்.