டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் போராட்டம்: தவஹீத் ஜமாஅத் முடிவு

தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.
Published on

தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் தமிழ்நாடு ஜமாஅத் தெற்கு மாவட்டப் பேச்சாளா்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகில் உள்ள அரசு டாஸ்மாக் கடையால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலைமை நீடித்தால் மக்கள் திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது, வக்பு வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களைச் செய்வதற்கு முயற்சி செய்யும் மத்திய அரசைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு மாவட்டத் துணைச் செயலா் ஷேக் அப்துல் காதா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சபீா் அலி, மாவட்டத் தலைவா் ஹாஜா ஜியாவுதீன், செயலா் ஆவணம் ரியாஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்டத் துணைத் தலைவா் அஷ்ரப் அலி, மருத்துவா் அணி மாவட்டச் செயலா் முஸ்தபா, மாவட்டப் பொருளாளா் ஜாபா் சாதிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com