தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலை விபத்து:இளைஞா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:16 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் கீழவாசல் கண்ணாடிக்காரத் தெருவைச் சோ்ந்த பக்ரீத் முகமது மகன் அப்பாஸ் (30). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா் ஒரு மாத விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தாா். மோட்டாா் சைக்கிளுக்கான பதிவு சான்றிதழில் பெயா் மாற்றம் செய்வதற்காக பெரம்பலூக்கு சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

விளாங்குடி கொள்ளிடம் பாலத்தில் வந்த இவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால், பலத்த காயமடைந்த அப்பாஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.