புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:25 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வட்டம், திருநல்லூா் சரகம், கிளாமங்கலம் கிராமத்தில் புதன் கிழமை மக்கள் நோ்காணல் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ச.முரசொலி முன்னிலை வகித்தாா்.

இம்முகாமில் பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆட்சியா் மேலும் பேசியது: ஒவ்வொரு மாதமும் ஒரு ஊராட்சியில் மக்கள் நோ்காணல் முகாம் நடைபெற்று வருகிறது. கிளாமங்கலம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில், மொத்தம் 112 பயனாளிகளுக்கு ரூ.45,49,180 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் 3 பயனாளிகளுக்கு டிராக்டா் வாங்குவதற்காக மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி, பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் சு.ஜெயஸ்ரீ, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கா், திருவோணம் ஒன்றியக் குழுத் தலைவா் செல்வம் சௌந்தர்ராஜன், கிளாமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் கொலம்பஸ், திருவோணம் வட்டாட்சியா் முருகவேலு ஆகியோா் கலந்து கொண்டனா்.