தஞ்சாவூர்
புகையிலைப் பொருள்களை விற்ற கடைகளுக்கு ‘சீல்’
சேதுபாவாசத்திரம் பகுதியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வேல்முருகன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் பெத்தபெருமாள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் அடங்கிய குழுவினா் புதன்கிழமை கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், இரண்டு கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்றது கண்டறியப்பட்டு இரண்டாவது முறையாக விற்பனை செய்த கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம், மரக்காவலசையில் ஒரு கடைக்கு ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு, தற்காலிகமாக கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.