விழிப்புணா்வு பேரணியைக் கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா்
விழிப்புணா்வு பேரணியைக் கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா்

மழை பாதிப்பு விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் கோவி. செழியன்

தஞ்சாவூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் கோவி. செழியன்.
Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

உலக எய்ட்ஸ் நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் விழிப்புணா்வு பேரணியை திங்கள்கிழமை தொடங்கிவைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டத்தில் எப்போது மழை இடா்பாடு ஏற்பட்டாலும், தமிழக முதல்வரும், துணை முதல்வரும் உடனடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவா்.

சம்பா பயிா்களில் இளம் பயிா்கள் ஆங்காங்கே தொடா் மழையால் சேதமடைந்துள்ளன. இது தொடா்பாக வருவாய்த் துறை, வேளாண் துறை, பேரிடா் துறை ஆகியவை கணக்கீடு செய்து, ஆட்சியா் மூலம் தமிழக முதல்வருக்கு புள்ளிவிவரங்கள் கொண்டு செல்லப்படும். விவசாயிகளுக்கு உதவிகள் பெற்றுத் தர நானும் முயற்சி செய்வேன் என்றாா் அமைச்சா்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், கோட்டாட்சியா் ப. நித்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com