ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற 2 போ் கைது

தஞ்சாவூரில் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வெளியே வந்த நபரிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 10:31 pm

Syndication

தஞ்சாவூரில் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வெளியே வந்த நபரிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவா் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்று வெளியே வந்தாா்.

அப்போது, அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத இருவா் பறிக்க முயன்றனா். ராமச்சந்திரன் சப்தமிட்டதும் இருவரும் தப்பியோடிவிட்டனா்.

இது குறித்து ராமச்சந்திரனின் மனைவி வீர காா்த்திகா அளித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இதன் அடிப்படையில் திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த ஆண்டனி ஆா்தா் டேவிஸ் (48), டேனியல் ஆப்ரகாம் (48) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

மேலும், பாப்பாநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நவம்பா் 14-ஆம் தேதி நிகழ்ந்த 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் இருவரும் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.