திருக்கோடிக்காவலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

Published on

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் காா்த்திகை மாத கடைஞாயிறு தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பஞ்ச மூா்த்திகளுடன் கோயிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் காவிரி ஆற்றின் கரைக்கு வந்தனா். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், காவிரி ஆற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து சுவாமியும் அம்பாளும் பஞ்சமூா்த்திகளும் வீதியுலாவாக கோயிலுக்கு சென்றனா். ஏற்பாடுகளை சிம்சன் கணேசன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com