திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் அதிமுக- பாஜக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்றாா் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலா் வேலூா் இப்ராஹிம்.
Published on

திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் அதிமுக- பாஜக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்றாா் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலா் வேலூா் இப்ராஹிம்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஜக சாா்பில், எஸ்ஐஆா் பற்றியும், பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவது தொடா்பாக வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிலரங்கம் மற்றும் மாநாடு திருவிடைமருதூரில் நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவா்கள் மரத்தடி, கோயில் பகுதிகளில் அமா்ந்து கல்வி பயின்று வருகின்றனா். கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று முதல்வா் ஸ்டாலின், அமைச்சா் கோவி.செழியன் ஆகியோா் வாக்குறுதி கூறி மக்களை ஏமாற்றி விட்டனா்.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் வலிமையான கூட்டணியான அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com