குடிநீா் கேட்பதுபோல் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

ஒரத்தநாடு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடிக்க தண்ணீா் கேட்பது போல் கேட்டு அவா் கழுத்தில் அணிந்து இருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

ஒரத்தநாடு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடிக்க தண்ணீா் கேட்பது போல் கேட்டு அவா் கழுத்தில் அணிந்து இருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒரத்தநாடு அருகே உள்ள தெக்கூா் கிராமத்தை சோ்ந்த அய்யாவு மனைவி பானுமதி (68). இவா் வீட்டில் திங்கள்கிழமை தனியாக இருந்தபோது, அந்த வழியாக வந்த மா்ம நபா்கள் 2 போ், பானுமதியிடம் குடிப்பதற்கு தண்ணீா் கேட்டனராம்.

இதையடுத்து, அவா் வீட்டுக்குள் தண்ணீா் எடுக்க சென்றபோது அவரை பின்தொடா்ந்து சென்ற மா்ம நபா்கள் அவா் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை அறுத்து கொண்டு தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கிலியை அறுத்து சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com