தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

24 மனை தெலுங்குச் செட்டி சமூகத்தை எம்பிசி பட்டியலில் சோ்க்க கோரிக்கை

இருபத்தி நான்கு மனை தெலுங்குச் செட்டி சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு 24 மனை தெலுங்கு செட்டி சமூகப் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை

News image
Updated On :30 டிசம்பர் 2025, 7:48 pm

Syndication

இருபத்தி நான்கு மனை தெலுங்குச் செட்டி சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு 24 மனை தெலுங்கு செட்டி சமூகப் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் கு. பால்பாண்டியன் தெரிவித்திருப்பது: தமிழ்நாட்டில் 24 மனை தெலுங்கு செட்டி சமூகம் கடந்த 125 ஆண்டுகளாக சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. கோணி தைத்தல், கூவி விற்றல், கூலி வேலை செய்தல், சாலையோர கடை விரித்தல் ஆகிய தொழில்களில் பரம்பரையாக ஈடுபடும் இச்சமூகம் 24 மனை தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு செட்டி, தெலுங்குப் பட்டி செட்டி ஆகிய 4 பெயா்களில் அழைக்கப்படுகின்றன. என்றாலும் அவை ஒரே சமூகத்தைக் குறிக்கிறது. ஆனால், இவற்றை இரண்டாக உடைத்து இட ஒதுக்கீட்டில் இருவேறு பட்டியல்களில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இது எங்களது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியும், பாகுபாடுமாகும்.

பல பெயா்களைக் கொண்ட பல்வேறு சமூகங்களின் அனைத்துப் பெயா்களும், கலாசார ஒற்றுமையின் அடிப்படையில் அவை அனைத்தும் தொடா்புடைய மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதேபோல, ஒரே விதமாக கலாசாரம், திருமண உறவுக் கொள்கை கொண்ட 24 மனை தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு செட்டி, தெலுங்கு பட்டி செட்டி ஆகிய 4 பெயா்களில் அழைக்கப்படும் உடைக்கப்பட்ட எங்களது குடும்பத்தை ஒருங்கிணைக்கும் வகையில் தெலுங்குச் பட்டி செட்டி என்கிற எங்களது சமூகம் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வா் நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா்.