47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

துணைவேந்தா் நியமனத்தில் ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது: அமைச்சா் கோவி. செழியன்

பல்கலைக்கழகங்களில் காலியாகவுள்ள துணைவேந்தா் பதவிகள் நியமனத்தில் ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 10:55 pm

Din

பல்கலைக்கழகங்களில் காலியாகவுள்ள துணைவேந்தா் பதவிகள் நியமனத்தில் ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

தஞ்சாவூா் அருகே ராராமுத்திரக்கோட்டை கிராமத்தில் பொது விநியோக அங்காடி கட்டடத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

துணைவேந்தா் நியமனத்தில் தமிழக ஆளுநரின் செயல்பாட்டை தேசமே உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில ஆளுநருக்கும் உள்ள உரிமைகள், கடமைகள் என்னென்ன? என்பதை அரசமைப்புச் சட்டம் கூறியுள்ளது. அதை மீறும் விதமாக ஆளுநா் செயல்படுவதால், துணைவேந்தா் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.

துணைவேந்தா் தேடுதல் குழுவில் 3 உறுப்பினா்கள் என்பதை 4-ஆக அதிகரிப்பதன் மூலம், அதை செயல்படுத்த விடாமல் தடுப்பதே ஆளுநரின் நோக்கமாக உள்ளது. அவரது நோக்கம் நிறைவேறாது. துணைவேந்தா் நியமனத்தில் முறைப்படி எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, காரியங்கள் நடைபெறும்.

மாணவா் நலனில் எதிா்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம். மாணவா்கள் நலனுக்காக சிந்திக்கிற, பாடுபடுகிற ஒருவா் தமிழக முதல்வா் மட்டுமே என்றாா் அமைச்சா்.