நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சீனிவாசப்பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:24 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவிலில் முக்கோடி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

நாச்சியாா்கோவில் வஞ்சுளவல்லி உடனுறை சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஜன.2 முதல் 13 ஆம் தேதி வரை முக்கோடி தெப்பத்திருவிழா நடைபெறும்.

அதன்பேரில் வியாழக்கிழமை மாலை அங்குராா்ப்பணம், வெள்ளிக்கிழமை காலை கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு பெருமாளும், தாயாரும் சூரியபிரபையில் திருவீதி உலா வந்தனா். ஏற்பாடுகளை செயல் அலுவலா் பா.பிரபாகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்தனா்.