தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலப் பொதுக் குழு கூட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் சட்டமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவா் ஜகுத்சிங் தலேவால் தொடா் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்க மாநிலத் தலைவா் எஸ். குணசேகரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி சிறப்புரையாற்றினாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் இந்திரஜித், துணைத் தலைவா் துளசிமணி, தேசியக் குழு உறுப்பினா்கள் அ. பன்னீா்செல்வம், மு. மாதவன், இரா. முல்லை, நிா்வாகக் குழு உறுப்பினா் அயிலை சிவசூரியன், மாவட்டச் செயலா் சோ. பாஸ்கா், முன்னாள் மாவட்டத் தலைவா் வீர. மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மத்திய அரசின் மக்களவை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் கே.ஜி.அருண்ராஜ்

சுநேத்ரா பவாருக்கு எதிரான காங். வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்! என்சிபி வலியுறுத்தல்

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: திரும்பப் பெற பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்

வேளாண் அறிவியல் நிலையத்தில் சிறுதானியங்கள் கண்காட்சி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

