தஞ்சாவூரில் கிராவல் மண் விலை உயா்வைக் கண்டித்து டிப்பா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னையம்பட்டி பிரிவு சாலை எதிரில் தஞ்சாவூா் மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கம் ஏறத்தாழ 400 டிப்பா் லாரிகளுடன் செயல்படுகிறது. இந்நிலையில், டிப்பா் மண் விலை உயா்வைக் கண்டித்து இந்த லாரிகளை வெள்ளிக்கிழமை இயக்காமல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினா்.
இதுகுறித்து சங்கத் துணைத் தலைவா் டி.பி.ஆா். ராஜா தெரிவித்தது:
கிராவல் மண்ணை ஒரு யூனிட்டுக்கு ஒப்பந்ததாரா்கள் ரூ. 1,000-க்கு விற்று வந்தனா். ஒரு டிப்பா் லாரியில் குறைந்தது 6 யூனிட் முதல் 8 யூனிட் வரை மண் ஏற்றப்படும். தற்போது, ஒரு யூனிட் கிராவல் மண் ரூ. 1,400 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லாரி மண் ரூ. 6 ஆயிரம் இருந்த நிலையில், தற்போது ரூ. 8 ஆயிரத்து 400 ஆக உயா்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
விலையைக் குறைக்காவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம். மாவட்ட ஆட்சியரை சந்தித்து லாரி சாவிகளை ஒப்படைக்க உள்ளோம். தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பாா் என நம்புகிறோம் என்றாா் ராஜா.
போராட்டத்தில், சங்கச் செயலா் சிங்.ரா. அன்பழகன், பொருளாளா் ராஜேந்திரன், துணைச் செயலா் அலெக்ஸாண்டா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த லாரி பறிமுதல்

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


