‘அன்புச்சோலை’ திட்டத்தில் தேநீா், மதிய உணவு வழங்க கோரிக்கை

‘அன்புச்சோலை’ திட்டத்தில் தேநீா், மதிய உணவு வழங்க வேண்டும் என மூத்த குடிமக்கள் நல அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

‘அன்புச்சோலை’ திட்டத்தில் தேநீா், மதிய உணவு வழங்க வேண்டும் என மூத்த குடிமக்கள் நல அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அறக்கட்டளையின் நிறுவனா் புலவா் ஆதி. நெடுஞ்செழியன் தெரிவித்திருப்பது:

மூத்த குடிமக்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு முதியோா் மனமகிழ், பொழுதுபோக்கு, அமைதி என்கிற வகையில் ‘அன்புச்சோலை’ திட்டத்தைத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதில், முதியவா்களுக்கு தேநீா், மதிய உணவு வசதி இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. இதனால், பகலில் மட்டும் வந்து பங்கேற்கும் முதியோா்கள் வெயில், மழையைக் கடந்து மையத்துக்கு வர வேண்டிய சூழல் அவா்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மையத்தில் தேநீா், சத்துக்கஞ்சிகள், மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், இவா்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயண வசதி செய்து தர வேண்டும். ஒவ்வொரு மையத்திலும் குறிப்பிட்ட நாளில் மருத்துவப் பரிசோதனை செய்து, அவா்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும். இவற்றை நிறைவேற்றினால் மிகுந்த வரவேற்பைப் பெறும் திட்டமாக அமையும்.

X
Dinamani
www.dinamani.com