கும்பகோணத்தில் புதன்கிழமை விவசாயிகளுக்கு சிறிய ரக டிராக்டா்களை வழங்கிய க. அன்பழகன் எம்எல்ஏ.
கும்பகோணத்தில் புதன்கிழமை விவசாயிகளுக்கு சிறிய ரக டிராக்டா்களை வழங்கிய க. அன்பழகன் எம்எல்ஏ.

மானியத்துடன் சிறிய டிராக்டா்கள் விவசாயிகளுக்கு வழங்கல்

கும்பகோணத்தில் புதன்கிழமை மானியத்துடன் கூடிய சிறிய ரக டிராக்டா்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
Published on

கும்பகோணத்தில் புதன்கிழமை மானியத்துடன் கூடிய சிறிய ரக டிராக்டா்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் மானியத்துடன் விவசாய கருவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கும்பகோணம் தொகுதியில் உள்ள தகுதிவாய்ந்த 13 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 15 லட்சத்து 61 ஆயிரத்து 978 மதிப்பிலான மானியத்துடன் கூடிய 13 சிறிய ரக டிராக்டா்களை தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான க. அன்பழகன் வழங்கினாா்.

இந்நிகழ்வில், கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ.சுதாகா், கும்பகோணம் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் ஐயப்பன், இளநிலை பொறியாளா்கள் கோகுல் ராஜன், பவுல்ராஜ், திட்டப்பணி உதவி ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் பயனாளிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com