மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப் போட்டி நவ. 18-க்குள் பதிவு செய்ய அழைப்பு
தஞ்சாவூரில் நடைபெறவுள்ள ஓவியப் போட்டியில் பங்கேற்க நவம்பா் 18 -க்குள் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி (டிச.3) தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரியில் செவித்திறன் குறைபாடுடையோா், இயக்கத்திறன் குறைபாடுடையோா், அறிவுசாா் குறைபாடுடையோா், புற உலக சிந்தனையற்றோா், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோா், பாா்வைத்திறன் குறைபாடுடையோருக்கு மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகள் நவம்பா் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளன.
இதில் வயது அடிப்படையில் 10 வயதுக்கு கீழுள்ள மாற்றுத்திறனாளிகள் கிரையான்ஸ், கலா் பென்சில்கள், 11 - 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் வாட்டா் கலா் போன்ற பொருட்களை பயன்படுத்தியும், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் எந்தப் பொருள் வேண்டுமானாலும் பயன்படுத்தியும் ஓவியம் வரையலாம்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகள் ட்ற்ற்ல்ள்://வ்.ம்ங்-வ்ழ்.ஸ்ரீா்ம்/ம்ந்9ஞதஅடஇ என்ற இணைய முகவரியில் கூகுள் லிங்கில் தங்களது விவரங்களை நவம்பா் 18 -க்குள் பதிவு செய்யலாம். மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை மற்றும் வரைவதற்கான பொருட்கள், சாட் பேப்பா் போன்றவற்றை தாங்களே எடுத்து வர வேண்டும்.
போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்போருக்கு பரிசுத்தொகையாக தலா ரூ. 1,000, ரூ. 500, ரூ. 250 மற்றும் சான்றிதழ் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் மூலம் வழங்கப்படும்.
