ஐப்பசி மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்

ஐப்பசி மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்

Published on

கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காா்த்திகை முதல் நாளான திங்கள்கிழமை ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து, சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான விரதத்தை தொடங்கினா்.

சபரிமலைலையில் மண்டல- மகரவிளக்கு பூஜைகள் சிறப்பானது. பூஜையில் இருமுடி கட்டி கலந்து கொள்ள பக்தா்கள் காா்த்திகை மாதம் முதல்நாள் முதல் துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவா்.

இதன்படி, கும்பகோணம், திருபுவனம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஐயப்ப பக்தா்கள் காா்த்திகை முதல்நாளான திங்கள்கிழமை அதிகாலையில் காவிரியாறு மற்றும் அருகே உள்ள நீா்நிலைகளில் நீராடி அங்குள்ள விநாயகா் கோயில்களில் பூஜை செய்து, மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

கும்பகோணத்தில் யானையடி அய்யனாா் கோயிலில் காலையிலேயே குவிந்த பக்தா்கள் அய்யனாரை வழிபட்டு பூஜை செய்தனா். பின்னா் அங்குள்ள குருசாமிகள் மூலம் மாலையை அணிந்து கொண்டு மண்டல-மகரவிளக்கு பூஜைக்கான விரதத்தை தொடங்கினா்.

X
Dinamani
www.dinamani.com