செங்கல் சூளையில் திருட்டு இளைஞா் கைது
பாபநாசம் அருகே செங்கல் சூளையில் மின் மோட்டாா் திருடிச் சென்ற மா்மநபரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் காவல் சரகம் தேவனோடை கொள்ளிடக் கரையில் உள்ள அய்யாதுரை என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் இருந்த 1/2 குதிரைத் திறன் கொண்ட மோட்டாா், இரும்பு சாமான்கள் உள்ளிட்டவற்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.
இதுதொடா்பாக அவா் கொடுத்த புகாரின்பேரில், கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மஹாலக்ஷ்மி மற்றும் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு செவ்வாய்கிழமை அண்டக்குடி பாலம் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த தியாகசமுத்திரம் சுதா்மன் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் வெங்கடசலபதி ( 37) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து திருட்டுப் போன பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மொத்த மதிப்பு ரூ. 7 ஆயிரம் ஆகும்.
