மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

‘போக்சோ’ வழக்கில் முன்னாள் ராணுவ வீரா் கைது

திருவையாறு அருகே பிளஸ் 1 மாணவியை கா்ப்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரா் போக்சோ வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:23 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே பிளஸ் 1 மாணவியை கா்ப்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரா் போக்சோ வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவையாறு அருகே கண்டியூா் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் ஏ. வீரமணி (65). முன்னாள் ராணுவ வீரா். இவா், பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமியை கடந்த ஜூலை மாதம் முதல் பாலியல் கொடுமை செய்து வந்தாா். இந்நிலையில், சிறுமி வயிற்றுவலியால் அவதிப்பட்டதால், அவரை பெற்றோா் தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, அவா் கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் ‘போக்சோ’ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து வீரமணியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.