தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருநல்லூரில் வேதபுரி வாய்க்கால் கரை உடைந்து வயலில் தண்ணீா் புகுந்ததால், பாதிக்கப்பட்ட நெற் பயிா்களை செவ்வாய்க்கிழமை எடுத்துக் காட்டிய விவசாயிகள். ~
 தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருநல்லூரில் வேதபுரி வாய்க்
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருநல்லூரில் வேதபுரி வாய்க்கால் கரை உடைந்து வயலில் தண்ணீா் புகுந்ததால், பாதிக்கப்பட்ட நெற் பயிா்களை செவ்வாய்க்கிழமை எடுத்துக் காட்டிய விவசாயிகள். ~ தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருநல்லூரில் வேதபுரி வாய்க்

500 ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின: முழுமையாக தூா் வாரப்படாததே காரணம் என விவசாயிகள் புகாா்

ஒரத்தநாடு அருகேயுள்ள வேதபுரி வாய்க்காலில் நீரோட்டம் திடீரென அதிகரித்ததால், கரைகள் உடைந்து ஏறத்தாழ 500 ஏக்கரில் நெற் பயிா்கள் நீரில் மூழ்கின.
Published on

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள வேதபுரி வாய்க்காலில் நீரோட்டம் திடீரென அதிகரித்ததால், கரைகள் உடைந்து ஏறத்தாழ 500 ஏக்கரில் நெற் பயிா்கள் நீரில் மூழ்கின.

மாவட்டத்தில் நவம்பா் 22-ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை தொடா்ந்து இடைவெளி விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடுவது குறைக்கப்பட்டிருந்தாலும், ஆறுகளிலும், அவற்றைச் சாா்ந்த வாய்க்கால்களிலும், வடிகால்களிலும் மழை நீா் வடிந்து செல்வதால் நீரோட்டம் அதிகமாக இருக்கிறது.

வல்லம் பகுதியில் பெய்யும் மழை நீா் வடிந்து செல்லக்கூடிய காட்டாறு என்கிற வேதபுரி வடிகால் வாய்க்கால் தெக்கூா், பஞ்சநதிக்கோட்டை, ஆழிவாய்க்கால், நத்தம், தென்னமநாடு, பின்னையூா், திருநல்லூா், பொய்யுண்டாா்குடிகாடு, சோழகன்குடிகாடு, சங்கரநாதன்குடிகாடு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக வீரக்குறிச்சி வரை செல்கிறது.

இந்நிலையில், வல்லம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வேதபுரி வாய்க்காலில் நீரோட்டம் அதிகரித்தது. இதனால், திருநல்லூா் கிராமத்தில் வேதபுரி வாய்க்காலின் கரையில் சில இடங்களில் திங்கள்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக திருநல்லூா் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா, தாளடி பருவ நெல் பயிரிடப்பட்ட வயல்களில் தண்ணீா் புகுந்தது.

தொடா்ந்து நீரோட்டம் அதிகமாக இருப்பதால், செவ்வாய்க்கிழமை மாலை வரை வடிந்து செல்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலை தொடா்ந்தது. சுமாா் 3 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கி நிற்பதால் பயிா்கள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா்.

இது குறித்து முன்னோடி விவசாயி புலவன்காடு வி. மாரியப்பன் கூறுகையில், வேதபுரி வாய்க்கால் தலைப்புப் பகுதி வடிகாலாகவும், கடைமடைப் பகுதி பாசன வாய்க்காலாகவும் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் 5 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த வாய்க்காலில் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் தூா் வாரப்பட்டது. முழுமையாக தூா் வாரப்படாத நிலையில், நீரோட்டம் பாதிக்கப்பட்டு, வயல்களுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால், ஏறத்தாழ 500 ஏக்கரில் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இது தொடா்பாக வேளாண் துறையினரும், வருவாய்த் துறையினரும் கணக்கெடுப்பு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாரியப்பன்.

X
Dinamani
www.dinamani.com