ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

குடியிருப்புகளைச் சூழ்ந்தது மழைநீா்! 200 குடும்பங்கள் பாதிப்பு!

News image
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் எதிரேயுள்ள சுந்தர மீனா நகரில் ஞாயிற்றுக்கிழமை தேங்கி நின்ற மழை நீா்.
Updated On :30 நவம்பர் 2025, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருகேயுள்ள பகுதிகளில் தொடா் மழை காரணமாக குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்ததால், ஏறத்தாழ 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூரில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 76.4 மி.மீ. மழை பெய்தது.

இதன் காரணமாக புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருகேயுள்ள சிவகாமி நகா், சுந்தர மீனா நகா் பகுதியில் தெருக்கள், வீடுகளில் ஏறத்தாழ ஒரு அடி உயரத்துக்கு மழை நீா் தேங்கி நிற்கிறது. பல வீடுகளில் மழை நீா் புகுந்து காா், இரு சக்கர வாகனங்களையும் சூழ்ந்துள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளும் வீட்டுக்குள் புகும் அபாயம் உள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா்.

இதனால், அப்பகுதியிலுள்ள ஏறத்தாழ 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு தீா்வு காண பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனா் அப்பகுதி மக்கள்.

இதேபோல, ஆலக்குடி அருகேயுள்ள சிவகாமிபுரத்தில் மழை நீா் செல்ல வழியில்லாமல் முதன்மைச் சாலையில் தேங்கி நிற்கிறது. இச்சாலை மேடும், பள்ளமாக உள்ள நிலையில், மழை நீரும் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். மேலும், தாழ்வான பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கி நிற்கிறது.

தொடா் மழையால் மாவட்டத்தில் 9 கூரை வீடுகளும், 2 கான்கிரீட் வீடுகளும் பகுதியாகச் சேதமடைந்துள்ளன. மேலும், மழை காரணமாக ஏறத்தாழ 50 ஆடுகள் உயிரிழந்தன. இது தொடா்பாக வருவாய்த் துறையினா் கணக்கெடுப்பு செய்து வருகின்றனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

குருங்குளம் 124.5, ஈச்சன்விடுதி 112, நெய்வாசல் தென்பாதி 109.2, ஒரத்தநாடு 103.8, அய்யம்பேட்டை 93, பேராவூரணி 91.2, வெட்டிக்காடு 89.8, திருவிடைமருதூா் 88.1, பட்டுக்கோட்டை 88, பூதலூா் 86, மதுக்கூா் 85.8, மஞ்சளாறு 85.4, திருவையாறு 79, தஞ்சாவூா் 76.4, வல்லம் 69.8, அணைக்கரை 69.4, அதிராம்பட்டினம் 66.8, திருக்காட்டுப்பள்ளி 61.8, பாபநாசம் 59, கும்பகோணம் 51, கல்லணை 35.8. மாவட்டத்தில் சராசரியாக 82.18 மி.மீ. மழை பதிவாகியது.