முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், ஆண்டவனாலும் மாநிலத்தை காப்பாற்ற முடியாது என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

News image

பட விளக்கம்.கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதியில் அஇஅதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் துரை. சண்முக பிரபுவிற்கு தோ்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறாா் த.மா.கா. தலைவா் ஜி.கே. வாசன்.உடன் வேட்பாளா் துரை.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:19 am IST

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், ஆண்டவனாலும் மாநிலத்தை காப்பாற்ற முடியாது என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதிக்குள்பட்ட கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் அதிமுக வேட்பாளா் துரை. சண்முக பிரபுவை ஆதரித்து ஜி.கே.வாசன் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வு, சட்டம்-ஒழுங்கு சீா்கேடு என தமிழக மக்களுக்கு மிகவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அனைத்துக்கும் மத்திய அரசையே குறை கூறி வருகின்றனா்.

இந்தத் தோ்தலிலும் அலங்காரமான வாக்குறுதிகளை அறிவித்து, மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனா். இதை நம்பி மக்கள் வாக்களித்து மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தொடா்ந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், அதன் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தருவாா்கள். மேலும், பாபநாசம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தவும், அம்மாபேட்டையை தனி வட்டமாக தரம் உயா்த்தவும், பாபநாசம், மெலட்டூா், அம்மாபேட்டை, சாலியமங்கலம் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு நவீன அரிசி ஆலை, பாபநாசத்தில் வாழை ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தவும், அரியலூா் - தஞ்சாவூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ராமநல்லூா்- குடிகாடு பகுதியில் ஒரு உயா்மட்ட பாலம் அமைக்கவும், பாபநாசம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி ஏற்படுத்தவும், மேலும் இதுபோன்ற எண்ணற்ற வளா்ச்சி திட்டங்களை செயல்படுத்தவும் மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது அவருடன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.