தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மம்தா சொன்னதால் தலைமைச் செயலா் மாற்றம்: கே.என். நேரு பேட்டி

தமிழகத்தில் எந்த அலுவலரையும் மாற்றவில்லை என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சொன்னதால், தமிழகத்தில் தலைமைச் செயலரை மாற்றியுள்ளனா் என்றாா் அமைச்சா் கே.என். நேரு.

News image

தஞ்சாவூா் திலகா் திடலில் முதல்வா் பிரசார பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் கே.என். நேரு.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:08 pm

தமிழகத்தில் எந்த அலுவலரையும் மாற்றவில்லை என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சொன்னதால், தமிழகத்தில் தலைமைச் செயலரை மாற்றியுள்ளனா் என்றாா் அமைச்சா் கே.என். நேரு.

தஞ்சாவூா் திலகா் திடலில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.10) மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் கே.என். நேருவிடம், தமிழக தலைமைச் செயலா் திமுகவுக்கு ஆதரவாக இருந்ததால் தோ்தல் ஆணையம் மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறதே என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் அளித்த பதில்: அதுபோன்று நாங்கள் கேள்விப்படவில்லை. தமிழ்நாட்டில் எந்த அலுவலரையும் மாற்றவில்லை என மம்தா பானா்ஜி கூறியதால்தான், தலைமைச் செயலரை மாற்றியுள்ளனா். எந்த அலுவலராக இருந்தாலும், மாற்ற முடியும்; அடுத்து வந்தால் திரும்பி வரப் போகின்றனா். அலுவலா்கள் என்ன செய்ய முடியும் என்றாா் அவா்.

மேலும், அவா் கூறியதாவது: விஜய் எவ்வளவு வாக்குகள் வாங்குவாா் என எனக்குத் தெரியாது. விஜய் எந்த வாக்குகளைப் பிரித்தாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. அதிமுக, பாஜகவுடன் விஜய் மறைமுகத் தொடா்பில் உள்ளாா். பாஜகவும் எங்களைத்தான் பேசுகின்றனா். விஜய்யும் எங்களைத்தான் பேசுகிறாா். திமுகவையும், ஸ்டாலினையும் பற்றிப் பேசினால்தான் அவருக்கு பத்திரிக்கையில் செய்தி வரும்; இல்லையென்றால் வராது.

திமுகவுக்கு எல்லா பக்கமும் மக்கள் ஆதரவு இருக்கிறது. பெண்கள் மத்தியில் முதல்வரின் திட்டங்கள் பிரபலமாகியிருக்கிறது. வாக்கு சேகரிப்பின்போது பெண்கள் ஆா்வமுடன் நாங்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்துவோம் என சொல்கின்றனா். எனவே, திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் அமைச்சா் நேரு.