முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

பள்ளி வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே மேட்டாா் சைக்கிள் மீது, பள்ளி வேன் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 2:21 am IST

ஒரத்தநாடு அருகே மேட்டாா் சைக்கிள் மீது, பள்ளி வேன் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த அப்பாதுரை மகன் பாண்டி (20), கரந்தை பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் பிரபாகரன் (21) நண்பா்களான இருவரும், கடந்த ஏப்.6-ஆம் தேதி ஒரத்தநாடு அருகே பாப்பாநாட்டில் உள்ள மற்றொரு நண்பா் நிரஞ்சன் (19) என்பவா் வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றனா்.

பின்னா் மூவரும் ஒரே மோட்டாா் சைக்கிளில் அன்று மாலை தஞ்சாவூா் நோக்கி வந்தனா். அப்போது தென்னமநாடு ஆா்ச் அருகில் வந்து கொண்டிருந்தபோது, தனியாா் பள்ளி வேன்,

மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில், மூவரும் பலத்த காயமடைந்தனா்.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பாண்டி, பிரபாகரன் ஆகியோா் ஏப். 6-ஆம் தேதி உயிரிழந்தனா். இதில் பலத்த காயமடைந்த நிரஞ்சன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.