உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் தஞ்சாவூா் தொகுதியை வளா்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவேன் என்றாா் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம்.

News image

தஞ்சாவூா் ரயிலடியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரத்தை நிறைவு செய்து பேசிய பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 1:01 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் தஞ்சாவூா் தொகுதியை வளா்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவேன் என்றாா் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம்.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த அவா் தெரிவித்தது:

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. நான் வெற்றி பெற்று தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக பதவியேற்றவுடன் தொகுதியின் வளா்ச்சியில் முழு கவனத்தைச் செலுத்துவேன்.

தஞ்சாவூா் தொகுதியை வளா்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன. மத்திய, மாநில அரசின் உதவியுடன் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலை, விவசாயக் கழிவுகளிலிருந்து உயிரிசாா் உற்பத்தி செய்யும் ஆலைகள், நவீன நெல் உலா்த்தும் கூடங்கள், புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் போன்றவை கொண்டு வரப்படும். நிப்டெம் மூலமாக உணவுப் பதப்படுத்தும் பயிற்சி மற்றும் புதிய தொழில்கள் தொடங்கவும் முயற்சி எடுக்கப்படும் என்றாா் கருப்பு முருகானந்தம்.