தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் 1038 மது பாட்டில்கள் பறிமுதல்: மூவா் கைது

திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் காவல் சரகப் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்கப் பதுக்கி வைத்திருந்த 1038 மதுப்பாட்டில்களை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.

News image

சேதுபாவாசத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களுடன் குற்றவாளிகள் .

Updated On :22 ஏப்ரல் 2026, 12:22 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் காவல் சரகப் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்கப் பதுக்கி வைத்திருந்த 1038 மதுப்பாட்டில்களை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வியாழன் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் விலைக்கு மதுவை விற்பதற்காக திருச்சிற்றம்பலம் ,சேதுபாவாசத்திரம் காவல் சரக பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் உதவி ஆய்வாளா்கள் ராம்குமாா், மனோஜ் மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் திருச்சிற்றம்பலம் போலீஸ் சரகத்தைச் சோ்ந்த ஒட்டங்காடு பகுதியில் சோதனையிட்டனா்.

அப்போது குழந்தை திரேஸ் (58) என்பவா் வீட்டில் பதுக்கியிருந்த 202 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா். இதேபோல சேதுபாவாசத்திரம் காவல் சரகம் கடற்கரை முனிக்கோயில் அருகே பேராவூரணியை சோ்ந்த துரைமுருகபாண்டியன் (42) மல்லிப்பட்டினத்தை சோ்ந்த மூா்த்தி (44) ஆகிய இருவரும் பதுக்கி வைத்திருந்த 836 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து அவா்களை கைது செய்தனா்.

இதில் சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படை போலீஸாரை தஞ்சை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்  பாராட்டினாா்.