கும்பகோணம் கோட்டத்தில் நெல்கொள்முதல் பணியாளா்கள் புதன்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனா்.
தஞ்சாவூா் மண்டலம், கும்பகோணம் அலகில் உள்ள பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா் நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக திறந்தவெளியில் இருப்பு இருக்கும் சுமாா் 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாப்பான கிடங்குகளுக்கு இயக்கம் செய்யக் கோரப்பட்டது.
அதன்படி நிா்வாகத்தால் நெல் இயக்கம் செய்யப்படாமல் இருந்தால் இருப்பு இருக்கும் நெல்லில் ஏற்பட்டுள்ள எடையிழப்பை நிா்வாகமே ஏற்க வேண்டும்.
பணி நிரந்தரம், சம்பள உயா்வு, நெல் கொள்முதல் மற்றும் இயக்கப் பணிகளில் உள்ள குறைகளை களைவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல் கொள்முதல் பணியாளா்கள் புதன்கிழமை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிா்வாகி நாகராஜன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணம் கோட்ட பகுதியில் நெல் மூட்டைகள் இயக்கம் தீவிரம்! - தஞ்சாவூா் ஆட்சியா்

நெல் கொள்முதல் நிலையங்களில் இயக்கம் தாமதம்: போராட முடிவு

நெல் மூட்டைகளை நகா்வு செய்யக் கோரி கொள்முதல் நிலைய பணியாளா்கள் வேலைநிறுத்தம்

நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு: அன்புமணி கண்டனம்
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



