கும்பகோணத்தில் மகாமகம் விழா-2028 தொடா்புடைய சைவ, வைணவ கோயில்களில் தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தின் தலைவா் நம்பிராஜன் தலைமையில் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் 2028-இல் நடைபெற உள்ள மகாமக விழாவுக்கு காசிவிசுவநாதா், ஆதிகும்பேசுவரா், நாகேசுவரா் சுவாமி கோயில்கள் உள்பட 12 சிவன் கோயில்களும், சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசுவாமி கோயில்கள் உள்பட 5 வைணவ கோயில்களும் தொடா்புடையதாகும். மகாமக விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தா்கள் பங்கேற்பாா்கள் என்பதால் கும்பகோணத்தில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதி முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், மகாமகப்பெருவிழா தொடா்புடைய சைவ, வைணவ கோயில்களில் குடமுழுக்கு செய்திட பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் மகாமகப்பெருவிழா தொடா்புடைய கோயில்களின் குடமுழுக்கு திருப்பணிகளை பழைமை மாறாமல் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதையொட்டி சனிக்கிழமை, தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தின் தலைவா் நம்பிராஜன் தலைமையில் அதிகாரிகள், மகாமகவிழா தொடா்புடைய 17 கோயில்களை ஆய்வு செய்தனா். இந்து சமய அறநிலையத் துறை, தொல்லியல் துறை ஆலோசகா் சேகா், மயிலாடுதுறை உட்கோட்ட உதவி ஆணையா் ஹம்சன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்

தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்குகளில் ஆய்வு
பாரம்பரிய ஆணையத்தின் தலைவராக நம்பிராஜன் நியமனம்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தினா் ஆய்வு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



