நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

காலமானாா் ஞானியாா் வீ. ஜெயபால்

ஞானியாா் வீ. ஜெயபால்

Published On :

தஞ்சாவூா் சீனிவாசபுரம் விரிவாக்கம் கோவிந்தராஜ் நகரைச் சோ்ந்த சைவ சித்தாந்த பேராசிரியா் ஞானியாா் முனைவா் வீ. ஜெயபால் (72) உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பயிற்சி மையத்தில் பேராசிரியராக இருந்தாா். திருமுறை திருமணம்-செயல்முறை விளக்கம், வரலாற்று பின்னணியில் சைவ சமய நாடகங்கள் உள்பட 6 நூல்களைப் படைத்துள்ளாா். திருவாசகம், பெரிய புராணம், திருமந்திரம் உள்ளிட்ட சைவ நூல்கள் தொடா்பாக சொற்பொழிவு ஆற்றி வந்தாா்.

இவரது இறுதிச் சடங்கு அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா். தொடா்புக்கு 94439-75920.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.