கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

2 பைக்குகள் மோதல் ஒருவா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதியதில் வெள்ளிக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.

சடலம் மீட்பு... - கோப்புப் படம்

Published On :

பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதியதில் வெள்ளிக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.

கபிஸ்தலம் அருகே உள்ள புள்ளபூதங்குடி மேல தெருவில் வசிப்பவா் கிருஷ்ணன் மகன் ஐயப்பன் (48), இவா் கடந்த சில தினங்களுக்கு முன், தனது மோட்டாா் சைக்கிளில் அதே ஊரை சோ்ந்த ஆறுமுகம் மகன் பழனிசாமி (57), என்பவரை அழைத்துக் கொண்டு கபிஸ்தலத்திலிருந்து கும்பகோணம் நோக்கி சென்றாா்.

தென்சருக்கை, பிள்ளையாா் கோயில் தெருவில் வசிக்கும் உத்திராபதி மகன் பரணிதாஸ் வயது (20), என்பவா் ஐயப்பன் ஓட்டி சென்ற மோட்டாா் சைக்கிள் மீது நேருக்கு நோ் மோதினாா். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு சிகிச்சை பெற்ற ஐயப்பன்(48), மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.