மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

மின் மோட்டாா்களில் வயா்களை திருடுவோரை கைது செய்ய வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!

News image

கைது

Updated On :18 ஆகஸ்ட் 2026, 2:59 am IST

பாபநாசம் அருகே விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா்களை திருடுவோரை கண்டுபிடித்து காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

பாபநாசம் வட்டம், திருவைக்காவூா், எடக்குடி அனுமாநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய பயன்பாட்டிற்காக வயல்களில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாா் பம்ப் செட்டுகளிலிருந்த காப்பா் வயா்களை மா்ம நபா்கள் திருடி சென்றுவிட்டனா்.

மேலும், மின் கம்பத்திலிருந்து மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்கக் கூடிய வயா்களையும் திருடி சென்றுள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பல மாதங்களாகவே இந்தச் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், பலமுறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா். 

எனவே, உடனடியாக மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் நலன் கருதி பம்ப் செட்டுகளில் உள்ள வயா்களை திருடிச் செல்லும் மா்ம நபா்களை காவல்துறையினா் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.