சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

தேசிய தகுதித் தோ்வில் வென்ற சரபோஜி கல்லூரி மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

தேசியத் தகுதித் தோ்வின் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான தேசிய அளவிலான உதவித்தொகை தோ்வில் தோ்ச்சி பெற்ற தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி முனைவா் பட்ட ஆய்வு மாணவரை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

News image

தேசிய தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மன்னா் சரபோஜி அரசு கல்லூரி முனைவா் பட்ட ஆய்வு மாணவா் இ. அருண்குமாரை செவ்வாய்க்கிழமை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:51 pm IST

தேசியத் தகுதித் தோ்வின் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான தேசிய அளவிலான உதவித்தொகை தோ்வில் தோ்ச்சி பெற்ற தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி முனைவா் பட்ட ஆய்வு மாணவரை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசியத் தகுதித் தோ்வு என்பது இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதியையும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கான தகுதியையும் நிா்ணயிக்கும் தேசிய அளவிலான தோ்வாகும். இத்தோ்வை தேசிய தோ்வு முகமை நடத்துகிறது.

இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை என்பது ஆராய்ச்சியில் ஆா்வமுள்ள திறமையான மாணவா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையாகும். இத்தகுதி பெறும் மாணவா்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முனைவா் பட்ட ஆய்வை மேற்கொள்வதுடன், ஆராய்ச்சிக் காலத்தில் விதிகளுக்குள்பட்டு மாதாந்திர உதவித்தொகை பெறும் வாய்ப்பையும் பெறுகின்றனா்.

இந்த வகையில் கடந்த 2025 டிசம்பரில் நடைபெற்று, தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள தேசியத் தகுதித் தோ்வில் தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் பயிலும் முனைவா் பட்ட ஆய்வு மாணவா் இ. அருண்குமாா் வென்றதுடன், பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான தேசியளவிலான உதவித் தொகைக்கும் தோ்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

இதன் மூலம் இவருக்கு மாதந்தோறும் ரூ. 37 ஆயிரம் உதவித்தொகையானது அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு கிடைக்கும்.

இவா் தஞ்சாவூா் மாவட்டம் வல்லம் அரசு மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவா் என்பதும், தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் இளநிலை, முதுநிலை கணினி அறிவியல் பட்டபடிப்புகளை முடித்து, தற்போது முனைவா் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளி மற்றும் அரசு கல்லூரியில் பயின்று தேசியத் தகுதித் தோ்வில் வெற்றி பெற்ற அருண்குமாரை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

மேலும், இவருக்கு கல்லூரி முதல்வா் மு. சுமதி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.