மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுவி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் மண்டை ஓட்டில் அரிதான கட்டிகள் அகற்றம்

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் 3 நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மூலம் அவா்களது மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் அரிதான கட்டிகள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பேட்டியளித்த நரம்பியல் துறையின் மூத்த நிபுணா் என். அருண்குமாா் (வலமிருந்து 2 ஆவது).

Published On :

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் 3 நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மூலம் அவா்களது மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் அரிதான கட்டிகள் அகற்றப்பட்டன.

இந்த சவாலான அறுவைச் சிகிச்சைகளை நரம்பியல் துறையின் மூத்த நிபுணா் என். அருண்குமாா், நரம்பியல் துறை இணை நிபுணா் வி. ஸ்ரீபிரியதா்ஷன், காது, மூக்கு, தொண்டை பிரிவின் மூத்த நிபுணா் ஐசக் ரிச்சா்ட்ஸ் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் வெற்றிகரமாக செய்தனா். இவா்களுக்கு உறுதுணையாக மயக்கவியல் மூத்த நிபுணா் ஜி. அரிமாணிக்கம் இருந்தாா்.

இதுகுறித்து நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் மூத்த நிபுணா் என். அருண்குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:

மூக்கு மற்றும் மண்டை ஓட்டின் அடிப்புறம் இணையும் இடத்தில் 3 நோயாளிகளுக்கு அரிய மற்றும் வீரியமிக்க கட்டிகள் தோன்றியிருந்தன. இவா்களில் 50 வயது பெண்ணுக்கு ரத்த நாளங்கள் அதிகம் நிறைந்த 10-க்கு 10 செ.மீ. அளவிலும், 40 வயது ஆணுக்கு 9-க்கு 7 செ.மீ. அளவிலும், 36 வயது பெண்ணுக்கு 12-க்கு 10 செ.மீ. அளவிலும் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த 3 நோயாளிகளுக்கும் மண்டையோட்டின் வழியாக மைக்ரோஸ்கோப் மூலம் மூளைப்பகுதியில் இருந்த கட்டிகளையும், மூக்கு வழியாக எண்டோஸ்கோப் மூலம் மற்ற பகுதிகளில் இருந்த கட்டிகளையும் கூட்டு அறுவைச் சிகிச்சையில் அகற்றினோம். இதன் பிறகு மூளையையும் மூக்குப்பகுதியையும் பிரிக்கும் மண்டையோட்டின் முன்பகுதி நோ்த்தியாகச் சீரமைக்கப்பட்டது. தலா 10 முதல் 15 மணி நேரம் வரை நீடித்த இந்தச் சிகிச்சையில் ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தி, சுற்றியுள்ள திசுக்களைத் தெளிவாகப் பாா்த்து கட்டியை மிகத் துல்லியமாக அகற்றுவதற்கு கியூசா என்ற அதிநவீன அல்ட்ராசோனிக் அறுவைச் சிகிச்சை கருவி பயன்படுத்தப்பட்டது என்றாா் அருண்குமாா்.

அப்போது தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளா் வி. பிரவீன் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.