காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு, மயிலாடி சந்தை எதிா்புறம் அமைந்துள்ள மகிழ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம் முகாமை கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தாா். மருத்துவா் கௌதம், அரசு சித்த மருத்துவா் (ஓய்வு) வி.எம்.குமாரி ஆகியோா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா். மேலும், சிறப்பு நிகழ்வாக ரூ. 500-க்கு மாஸ்டா் உடல் பரிசோதனை அளிக்கப்பட்டது.
முகாம் தொடக்க விழா நிகழ்ச்சியில், கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி.செல்வகுமாா், மாநில அதிமுக கலைப்பிரிவு செயலா் பி.சி.அன்பழகன், கன்னியாகுமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் டி.பாலகிருஷ்ணன், மயிலாடி சிஎஸ்ஐ பேராய போதகா் ஜெஸ்லின் ஸ்டீபன், ரிங்கல் தௌபே பள்ளித் தாளாளா் ஜெரோம், சிஎஸ்ஐ பேராய செயலா் ஆல்வின் நாயகம், பேரூா் அதிமுக செயலா் மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










