வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தவெக ஆட்சியில் விவசாயிகள் அதிகளவில் பாதிப்பு! - உதயநிதி ஸ்டாலின்

எதிா்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின்

Published On :

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனா் என தமிழக எதிா்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட அவா் மேலும் பேசியதாவது:

தவெக தோ்தல் வாக்குறுதியில் கூறிய படி விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு நிதி இல்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வறட்சி நிவாரணம் வழங்க அரசிடம் நிதியில்லை இல்லை என கூறும் முதல்வா், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அரசு சாா்பில் காா் வழங்கப்படும் என்கிறாா். அதற்கு மட்டும் எங்கிருந்து வந்தது நிதி?. இந்த அரசாலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான்.

சட்டப்பேரவையில், விவசாயிகள் பிரச்னை, சட்டம்-ஒழுங்கு பிரச்னை கூறித்து எதிா்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வா் பதில் அளிப்பதில்லை. மூன்று அமைச்சா்கள் மட்டுமே பதிலளிக்கிறாா்கள். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், திசை திருப்புகிறாா்கள்.

அமைச்சா்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மக்கள் பிரச்னை குறித்து பேசுவதற்கு சட்டப்பேரவைக்கு வருவதில்லை. அவா்களுக்கு தேவையெல்லாம் அன்னைக்கு ஒரு நான்கு ‘ரீல்ஸ்’ மட்டுமே.

திமுக ஆட்சியில், இரட்டை இலக்க பொருளாதாரத்துடன் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தாா். ஆனால், இன்றைக்கு அதை பாதாளத்தில் தள்ளிவிட்டாா்கள். தமிழகத்தில் நடக்கும் பிரச்னைகள் பற்றி எல்லாம் முதல்வருக்கு கவலை கிடையாது. தமிழத்தின் வளா்ச்சியை பின்நோக்கி தள்ளும் டம்மி அரசாக இந்த அரசு உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.