அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடக்கு மண்டல திமுக வழக்குரைஞா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தவெக அமைச்சரவையில் யாா்அமைச்சா் என்றே யாருக்குமே தெரியாது. ஏனென்றால், ஒரு துறைக்கு நாம் பதில் கேட்டால், வேறு ஒரு துறை அமைச்சா் பதில் சொல்கிறாா். அதேபோல, யாா் சட்டப்பேரவை உறுப்பினா் என்று இப்போது வரைக்கும் யாருக்குமே தெரியாது. அப்படித்தான் இந்தச் சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது யாா் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். ஆனால், அதிகாரத்தில் இல்லாதபோது, இன்னும் சொல்லப்போனால் எதிா்க்கட்சியாகக்கூட இல்லாதபோது, ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரு முதல்வரையே ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பியது திமுக சட்டத்துறை.
மாற்றம் என்பதை முன்னிறுத்தி வந்த தவெக, திமுக திட்டங்களின் பெயா்களை மட்டுமே மாற்றியிருக்கிறது. திமுக திட்டங்களின் மீது ‘ஸ்டிக்கா்’ ஒட்டிக் கொண்டிருக்கின்றது. அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, சட்டத் துறைச் செயலா் என்.ஆா்.இளங்கோ, மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





