8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மேட்டூா் அணை திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க கோரிக்கை

மேட்டூா் அணையில் தண்ணீா் திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என பாபநாசம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூா் அணை

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:21 am IST

மேட்டூா் அணையில்  தண்ணீா் திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என பாபநாசம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு  பருவமழை   தொடங்கியுள்ள நிலையில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88 அடியாக உள்ளது.

அணைக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் மேட்டூா் அணை 90 அடியை எட்டி விடும் சூழ்நிலை உள்ளது. தற்போது  விவசாயிகள் முற்பட்ட குறுவை சாகுபடி முடிந்து  சம்பா சாகுபடிக்கு விதை விட துவங்கும் நிலையில் உள்ளனா். இந் நிலையில்  மேட்டூரிலிருந்து தண்ணீா் திறந்து விடுவது பற்றி அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

10 நாள்கள் முன்னதாகவே மேட்டூா் அணை திறக்கும் தேதியை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க முடியும். இல்லாவிட்டால் வடகிழக்கு பருவமழை காலங்களில் பயிா்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே, உடனடியாக அரசு மேட்டூா் அணை திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று பாபநாசம் பகுதி விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.