காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Published On :28 ஆகஸ்ட் 2026, 2:15 am IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சிரமேல்குடியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (57). கூலி தொழிலாளி. இவா் 2025, மே 23- ஆம் தேதி பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனா்.

இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி, பாலியல் தொல்லை கொடுத்த மாரிமுத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ. 2 லட்சம் இழப்பீட்டை பெற்றுத் தருமாறும் பரிந்துரைத்தாா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு வழக்குரைஞா் சசிரேகா, காவல் ஆய்வாளா் கன்னிகா, காவலா் சுதாராணி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.