கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

ரயிலில் பாலியல் தொல்லை வட மாநில இளைஞா் கைது

ரயிலில் பெண்களிடம் பாலியல் ரீதியாக சைகைகள் காட்டி தொல்லை கொடுத்த வட மாநில இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:17 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே ரயிலில் பெண்களிடம் பாலியல் ரீதியாக சைகைகள் காட்டி தொல்லை கொடுத்த வட மாநில இளைஞரைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியிலிருந்து தஞ்சாவூா் வழியாக சென்னை நோக்கி சனிக்கிழமை ரயில் சென்று கொண்டிருந்தது. அதில், பயணம் செய்த பெண்களிடம் வடமாநில இளைஞா் பாலியல் ரீதியாக சைகைகள் செய்து, மிகவும் மோசமாக நடந்து கொண்டாராம்.

இதுகுறித்து இருப்புப்பாதை காவல் பிரிவினருக்கு பெண் பயணிகள் புகாா் செய்தனா். இந்த ரயில் கும்பகோணம் வந்தவுடன் உதவி ஆய்வாளா் செந்தில்வேலன் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த உத்தர பிரதேச மாநிலம் நிக்கான் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ சவான் மகன் ராஜேஷ் சியாம் (35) என்பவரை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.