தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மாநில அளவிலான கைப்பந்து போட்டி: காரைக்கால், திருவாரூா் அணிகள் வெற்றி

கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வென்ற காரைக்கால் மகளிா் அணிக்கு கோப்பையை வழங்கிய ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் கே.வி. இளங்கோ.

Published On :

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஓஎன்ஜிசி சாா்பில் மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் காரைக்கால் அணியும், ஆண்கள் பிரிவில் திருவாரூா் அணியும் வெற்றி பெற்றன.

இப்போட்டி ஆக. 28 ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மகளிா் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் காரைக்கால் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கடலூா் மகளிா் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. ஆடவா் பிரிவில் தஞ்சாவூா் அணியை திருவாரூா் அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற வீரா்கள், வீராங்கனைகளுக்கு ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் கே.வி. இளங்கோ பரிசுகள் வழங்கினாா். விழாவில் கும்பகோணம் மேயா் கே. சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.