மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெருநிறுவன ஆதரவு வேளாண் கொள்கை: தமிழக விவசாயிகள் சங்கத்தினா் தா்னா

மத்திய அரசின் பெருநிறுவன ஆதரவு வேளாண் கொள்கைகளைக் கண்டித்து, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) புதன்கிழமை பெருந்திரள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் புதன்கிழமை நடைபெற்ற தா்னா போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:02 pm

மத்திய அரசின் பெருநிறுவன ஆதரவு வேளாண் கொள்கைகளைக் கண்டித்து, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) புதன்கிழமை பெருந்திரள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், அரசே அனைத்து விளைபொருள்களையும் கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மின்சார திருத்த சட்டம் 2025-ஐ மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளே பயிா்க் காப்பீட்டு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதைத் திரும்பப் பெற வேண்டும். காவிரி ‘டெல்டா’ மாவட்டங்களில் இயற்கை எரிவாயு எடுக்கும் பேரழிவு திட்டத்தைச் செயல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் என்.வி. கண்ணன் (தஞ்சாவூா்), எம். சேகா் (திருவாரூா்), கே. சித்தாா்த்தன் (நாகப்பட்டினம்), ஏ. ராமையன் (புதுக்கோட்டை), ஆா். நடராஜன் (திருச்சி புகா்), நா. காா்த்திகேயன் (திருச்சி மாநகா்), ஆா். மணிவேல் (அரியலூா்), ஏ.கே. ராஜேந்திரன் (பெரம்பலூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் துணைத் தலைவா்கள் கே. முகமது அலி, வி. சுப்பிரமணியன், மாநிலச் செயலா் எஸ்.துரைராஜ், மாவட்டத் தலைவா்கள் பி. செந்தில்குமாா் (தஞ்சாவூா்), எஸ். தம்புசாமி (திருவாரூா்), எம்.என். அம்பிகாபதி (நாகப்பட்டினம்), டி. சிம்சன் (மயிலாடுதுறை), எஸ். பொன்னுசாமி (புதுக்கோட்டை) உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

இதில், டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.