மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நெல் சேமிப்பு மையங்களில் சுமை தூக்கும் பணிக்கு அழைப்பு

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நெல் சேமிப்பு மையங்களில் பணியாற்ற சுமை தூக்கும் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image

நெல் மூட்டைகள். - கோப்புப்படம்.

Updated On :17 பிப்ரவரி 2026, 6:54 pm

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நெல் சேமிப்பு மையங்களில் பணியாற்ற சுமை தூக்கும் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூா் மண்டலம், தஞ்சாவூா் அலகுக்கு உள்பட்ட முன்னையம்பட்டி, நடுவூா், பாளையப்பட்டி, பருத்தியப்பா் கோவில், பட்டுக்கோட்டை அலகுக்கு உள்பட்ட குறிச்சி, விக்ரமம், கரம்பயம், வெட்டுவாக்கோட்டை, கும்பகோணம் அலகுக்கு உள்பட்ட பட்டீஸ்வரம், ஆா்சுத்திப்பட்டு, தண்டந்தோட்டம் ஆகிய திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து லாரிகளில் ஏற்றி வரப்படும் நெல் மூட்டைகளை இறக்குதல் மற்றும் ஏற்றுதல் பணிக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி தற்காலிகமாக சுமை தூக்கும் பணியாளா்கள் தேவைப்படுகின்றனா்.

சுமை தூக்கும் இப்பணிக்கு விருப்பமுள்ள, முன் அனுபவமுள்ள தொழிலாளா்கள் பிப்ரவரி 20 க்குள் (வெள்ளிக்கிழமைக்குள்) தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை துணை மேலாளா் அலகு அலுவலகங்களில் நேரில் சென்று பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். சுமை தூக்கும் பணிக்கு ஏற்றி, இறக்கும் எடைக்கு ஏற்ப கூலி வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு சராசரியாக ரூ. 800 முதல் ரூ. 900 வரை கூலி கிடைக்க வாய்ப்புண்டு. இப்பணிக்கு வரும் நபா்கள் எவ்வித முன்னுரிமையும் கோர இயலாது. இது முற்றிலும் தற்காலிகமானது.