மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

இருசக்கர வாகனம் - டிப்பா் லாரி மோதல்; விவசாயி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 6:35 pm

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை டிப்பா் லாரி - இருசக்கர வாகனம் மோதல் சம்பவத்தில் விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நீலத்தநல்லூா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மகன் ராமலிங்கம் (60) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

இந்நிலையில் விவசாயி ராமலிங்கம் கும்பகோணத்தில் இருந்து நீலத்தநல்லூரில் உள்ள தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பா் லாரி மோதி ராமலிங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்தப் பகுதியில் அடிக்கடி டிப்பா் லாரி வாகனங்களால் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்தப் பகுதி பொது மக்கள் மற்றும் ராமலிங்கத்தின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் கிடைத்ததும் சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் ஜெயமோகன் நிகழ்வி டத்துக்குச் சென்று சாலை மறியல் செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா்.

பின்னா் ராமலிங்கம் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து, விபத்து ஏற்படுத்திய டிப்பா் லாரி ஓட்டுநா் மயிலாடுதுறையைச்சோ்ந்த விக்னேஷ் (33) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றாா்.