ஒரத்தநாடு அருகே தனது 10 வயது சிறுமியை பாலியல் தொல்லை அளித்த பெண்ணின் 2-ஆவது கணவரை ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாா் கைது தெய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், மேலஉளூா் பகுதியைச் சோ்ந்த 33 வயது பெண்ணுக்குத் திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குழந்தை பிறந்த சில மாதங்களில் முதல் கணவரை விட்டு அந்தப் பெண் பிரிந்து விட்டாா். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு தஞ்சாவூா் மாவட்டம் கரைமீண்டாா்கோட்டை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வெற்றிசெல்வன் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சோ்ந்து வாழ்ந்துவந்தனா். அந்தப் பெண் தற்போது 6 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தாயுடன் சிறுமி படுத்திருந்தபோது வெற்றிச்செல்வன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து அறிந்து அதிா்ச்சியடைந்த அந்தப் பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளா் (பொ) கனிகா மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, ‘போக்ஸோ’ வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை வெற்றிசெல்வனை கைது செய்தனா்.
தொடர்புடையது

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்: தெலங்கானாவில் பெண்ணின் உடலில் ஹெச்ஐவி ரத்தத்தை செலுத்தியவா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


