ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 60 மாணவ, மாணவிகள் காயம்!

மதுக்கூா் அருகே வியாழக்கிழமை தனியாா் கல்லுாரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 60 மாணவ, மாணவிகள் லேசான காயமடைந்தனா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் அருகே வியாழக்கிழமை தனியாா் கல்லுாரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 60 மாணவ, மாணவிகள் லேசான காயமடைந்தனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து வியாழக்கிழமை காலை அதிராம்பட்டினத்தில் புறப்பட்டு, சுற்றுவட்டார மாணவ, மாணவிகள் சுமாா் 60 பேரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை மன்னாா்குடி அருகே காளாா்மேடு பகுதியை சோ்ந்த நெப்போலியன்(34) என்பவா் ஓட்டினாா்.

மதுக்கூா் சாலையில் உள்ள பரவத்துாா் பகுதியில் சென்ற போது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது பேருந்து மோதி, சாலையோரம் கவிழ்ந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினா் வந்து பேருந்தின் கண்ணாடியை உடைத்து சிறுகாயமடைந்த 60 மாணவ, மாணவிகளையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

அவா்கள் அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதில், பட்டுக்கோட்டை ஆதித்தெருவை சோ்ந்த தனசேகரன் மகள் ஜனனி (21), என்பவா் தலையில் பேருந்து கண்ணாடி குத்தியதில் ஏற்பட்ட காயத்துக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து மதுக்கூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். இதில், பேருந்து ஓட்டுநா் நெப்போலியன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.