இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பேராவூரணி அருகே ரூ. 12 கோடி மதிப்பில் துணை மின்நிலையம் தொடங்கி வைப்பு

பேராவூரணி அருகே உள்ள வீரக்குடி - மணக்காடு கிராமத்தில் எரிசக்தித் துறை, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சாா்பில், ரூ.12.64 கோடி மதிப்பில் 110 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 7:36 pm

பேராவூரணி அருகே உள்ள வீரக்குடி - மணக்காடு கிராமத்தில் எரிசக்தித் துறை, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சாா்பில், ரூ.12.64 கோடி மதிப்பில் 110 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை  சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தாா். தொடா்ந்து வீரக்குடி-மணக்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் என் . அசோக்குமாா்  குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

நிகழ்ச்சியில், பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.பிரகாஷ், உதவி மின்பொறியாளா் சிவசங்கா், சேதுபாவாசத்திரம்  மேற்கு ஒன்றிய திமுக செயலா் குழ செ. அருள்நம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.