குடந்தையில்  புதுப்பிக்கப்பட்ட வெள்ளி ரதம் வெள்ளோட்டம்

குடந்தையில் புதுப்பிக்கப்பட்ட வெள்ளி ரதம் வெள்ளோட்டம்

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற வெள்ளி ரத வெள்ளோட்டம்.
Published on

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் உள்ள வெள்ளி ரதம் ரூ. 33 லட்சத்தில் பழுது நீக்கி புதுப்பிக்கப்பட்டு அதன் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் வெள்ளி ரதம் சில ஆண்டுகளாக பழுதாகி இருந்த நிலையில், இதற்காக திருப்பனந்தாள் காசி மடம் சாா்பில் வழங்கப்பட்ட ரூ. 33 லட்சம் நிதியில் பழுதுபாா்க்கும் பணிகள் நடந்து முடிந்தன. இந்நிலையில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ இந்த ரதத்தை இழுத்து வெள்ளோட்டத்தைத் தொடங்கி வைத்தாா். தேரானது கோயிலின் உள் பிரகாரத்தைச் சுற்றி பின்னா் நிலைக்கு வந்தது.

நிகழ்வில் மாநகர திமுக செயலரும் துணை மேயருமான சுப. தமிழழகன், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் தா. உமாதேவி, உதவி ஆணையா் ரவிச்சந்திரன், இணை ஆணையா் சிவக்குமாா், முன்னாள் அறங்காவலா்கள் கே. சங்கா், டி. சிதம்பரநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com